வெயில் காலத்தில் என்ன சாப்பிட கூடாது
வந்தாச்சு வெயில் காலம்
மார்ச் பாதி நாட்களில் இருந்தே வாட்டி வதைக்கிறது சூரியன். இந்த காலகட்டத்தில் நாம் நம் உடல்நிலை சார்ந்து அக்கறையுடன் இருக்க வேண்டும்.
வெயில் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை விட என்னவெல்லாம் சாப்பிட கூடாது என்று பார்ப்போம்.
சிக்கன், இறால், நண்டு, போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவை சில உடல் சூட்டை கிளப்பி, உடலில் இருந்து நீரை வெளியேற்றி விட வாய்ப்புள்ளது.
எண்ணெய்யில் செய்யும் பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.
காரம் நிறைந்த உணவு, உப்பு , புளியை குறைந்த அளவில் எடுத்து கொள்வது நல்லது.
பால், தயிர் போன்றவற்றால் உடல் வெப்பம் அதிரிக்கும்.
காபி, தேநீர் குறைத்துக் கொண்டால் நலம்.
குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர் அதிகமாக பருகினால் உடல் குளிர்ச்சி தரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக