திங்கட்கிழமை காலை கிறுகிறுக்கும் அனைத்து தரப்பினர்
அட போங்கப்பா இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஏன்தான் வேகமாக ஓடுகின்றதோ...? இது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்ல ஆபீஸ் போகின்ற ஆண்கள் பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் ஏற்படுகின்ற சலிப்பு.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை காலை 10,11 மணி வரை தூக்கம் போட்டு என்ஜாய் பன்னிட்டு, பிடிச்ச அசைவ உணவுகள் சமையல் செய்து சாப்பிட்டு வீட்டில் அனைவரும் வார நாட்களில் நடந்த நிகழ்வுகள், முக்கிய விஷயங்களை பேசி மாலை 3 மணிக்கு மேல் நகரங்களில் வசிப்பவர்கள் வெளியில் பொழுதை கழிக்க சென்றுவிடுகிறார்கள் என்றால் கிராமங்களில் விளையாட்டு, அரட்டை, உறவினர் நண்பர்கள் வீடு என பொழுதை கழித்து விட ஞாயிற்றுக்கிழமை என்பது "உசைன் போல்ட்" ஓடும் வேகத்தை விட விரைவாக ஓடி விடுகிறது.
திங்கட்கிழமை காலை விடிஞ்சா போதும் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, பணியில் இருப்பவராக இருந்தாலும் சரி ஏன்டா விடிஞ்சது என்ற மனநிலையிலேயே இருப்பர். அதுவும் இல்லத்து அரசிகள் பாடு கேட்கவா வேண்டும்.. வார நாட்களிலும் வேலை பளு. ஞாயிற்றுக்கிழமை இன்னும் அதிகமாக வேலைப்பளு சேர்ந்த நிலையில் திங்கட்கிழமை காலை அவர்கள் நிலைமை வடிவேலு சொல்ற மாதிரி 'என்னால முடியல'
-நன்றி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் ✍️
உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன் 🙏
நண்பர்களுக்கும் பகிருங்கள் ❤️
கருத்துகள்
கருத்துரையிடுக