எட்டு போட்டு நடந்தால் ஆரோக்கியம் உங்கள் வசம்
வணக்கம் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி! ஆரோக்கியம் அது என்ன விலை? என கேட்கும் காலம் ஆகி விட்டது. பழைய உணவு பழக்க வழக்க முறைகள் மலையேறி போகவே, இன்று நம் ஆரோக்கியம் கேள்வி குறியாய் இருக்கும் நிலை. நாம் உடல்நலத்தை சிறப்பாக கையாள இப்போது நமக்கு கிடைத்து இருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான் எட்டு வடிவில் கோடு போட்டு நடக்கும் முறை. வீட்டில் மாடியிலோ, பூங்காக்கள், விளையாட்டு திடல் என இடம் கிடைக்கும் இடத்தில் 8 வடிவத்தில் வரைந்து கூழாங்கல் இட்டு அதில் நடக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. எட்டு போடும் முறை: தெற்கு வடக்காக ஒரு ஒரு வட்டமும் 8 அடி நீளத்தில் அமையலாம் அல்லது 10 அடியிலும் அமையலாம். மற்றபடி 8 அடிக்கு குறையாமல் அமைய வேண்டும். எட்டு அடிக்கும் குறையும் போது நடக்கும் நேரத்தில் மயக்கம், உடற்சோர்வு ஏற்படக்கூடும். எனவே அளவை எட்டு அடிக்கு மேல் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வரைந்த எட்டு வடிவத்தில் கூழாங்கற்கள் கொண்டு நடப்பதற்கு ஏதுவாக பதிக்க வேண்டும். பயன்கள்: காலை, மாலை அல்லது இரவு இரு வேளைகளில் குறைந்தது 20 நிமி...